/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாளை தீபாவளி பண்டிகை: தமிழக எல்லை ஓசூரில் கடும் போக்குவரத்து பாதிப்பு
/
நாளை தீபாவளி பண்டிகை: தமிழக எல்லை ஓசூரில் கடும் போக்குவரத்து பாதிப்பு
நாளை தீபாவளி பண்டிகை: தமிழக எல்லை ஓசூரில் கடும் போக்குவரத்து பாதிப்பு
நாளை தீபாவளி பண்டிகை: தமிழக எல்லை ஓசூரில் கடும் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 30, 2024 06:44 AM
ஓசூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து பாதிப்பால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 110 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடக்கிறது. கர்நாடகா மக்கள் அதிகளவில் கார், டூவீலரில் வந்து பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். இதனால், ஓசூரிலுள்ள கிருஷ்ணகிரி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள், சர்வீஸ் சாலைகள், பாகலுார் சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (அக்.31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கர்நாடகா வாழ் தமிழர்கள் நேற்று முதல், சொந்த ஊருக்கு கார், டூவீலர்களில் வர துவங்கியுள்ளனர். அதனாலும், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடும் போக்குவரத்து பாதிப்பால், ஓசூர் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே சென்று வர சிரமமாக உள்ளது. மேலும், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சுண்டகிரி, சாமல்பள்ளம், மேலுமலை, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகிய, 6 இடங்களில் நடக்கும் உயர்மட்ட பால பணிகளால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது, நேற்று மாலை முதல் மேலும் அதிகரித்தது. இந்நேரத்தில், ஓசூர் நகரிலும் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்துள்ளது.