ADDED : பிப் 13, 2026 08:01 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், நாராயணன், தனசேகர் மற்றும் காங்., வி.சி.,, கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* ஓசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மேயர் சத்யா, மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
* காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தசாமி தலைமையில், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அதேபோல சூளகிரி, மத்துார், பர்கூர், ஊத்தங்கரை உட்பட, 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
