ADDED : செப் 06, 2025 12:55 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி :ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில், ஈ.வெ.ரா., புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் எல்.இ.டி., திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பார்த்தனர்.
தி.மு.க., மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலர் இசை, சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தேவகுமார், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மக்களுக்கு இனிப்பு வழங்கி தி.மு.க.,வினர் கொண்டாடினர்
