/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மேயருக்கு எதிராக கூட்டம் நடத்திய தி.மு.க., கவுன்சிலர்கள்; பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த மாவட்ட செயலாளர்

ADDED : ஆக 03, 2024 06:59 AM
ஓசூர்: ஓசூர் மாநகர மேயருக்கு எதிராக போட்டி கூட்டம் நடத்திய, தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து பேசிய மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., அனைவரையும் சமாதானப்படுத்தினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர மேயராக, தி.மு.க.,வை சேர்ந்த சத்யா உள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணி பெரிய அளவில் நடக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கவுன்சிலர்களை மதிப்பதில்லை. அதிகாரிகளின் அலட்சியப்போக்கு போன்ற பல்வேறு காரணங்களால், மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் தி.மு.க., கவுன்சிலர்கள் தடுமாறி வந்தனர். இதை மேயர் சத்யாவும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த, 31 ல், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் சத்யா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தை புறக்கணித்த, 14 தி.மு.க., கவுன்சிலர்கள், பா.ம.க., கவுன்சிலர் ஒருவர், 3 சுயேச்சைகள் என மொத்தம், 18 பேர், பாகலுார் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், துணை மேயர் ஆனந்தய்யா தலைமையில் போட்டி கூட்டம் நடத்தினர்.அக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். புதிய கமிஷனர் பதவியேற்ற பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என தீர்மானித்து, அதை மனுவாக எழுதி, 18 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு, மேயர் சத்யாவிடம் கொடுத்தனர். இதையறிந்த கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூரில் உள்ள மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு நேற்று மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதனால், மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருப்பதாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.