ADDED : அக் 24, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., செயற்குழு கூட்டம்
தர்மபுரி, அக். 24-
தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், தர்மபுரியிலுள்ள கட்சி அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தீர்மானங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், வரும் நவம்பர், 27 அன்று துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்களில், கட்சி நிர்வாகிகள், பொது மக்களுக்கு உறுதுணையாக இருந்து புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.
இறந்த வாக்காளர்களை நீக்க, கட்சி நிர்வாகி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.