/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் கர்நாடகாவில் தனிப்படை சல்லடை
/
தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் கர்நாடகாவில் தனிப்படை சல்லடை
தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் கர்நாடகாவில் தனிப்படை சல்லடை
தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் கர்நாடகாவில் தனிப்படை சல்லடை
ADDED : மார் 17, 2024 07:46 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகையை சேர்ந்தவர் கார்த்திக், 35; சூளகிரி வடக்கு ஒன்றிய, தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்.
இவர், நேற்று முன்தினம் மாலை, மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கார்த்திக் தாய்மாமா சஞ்சீவப்பாவிற்கு, கர்நாடகா மாநிலம், அனிகிரிப்பள்ளியில், 3.45 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்திற்கு அப்பகுதியை சேர்ந்த நாராயணப்பா உரிமை கோரி வந்தார்.
இது குறித்த வழக்கில், சஞ்சீவப்பாவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தும், அவரால் நிலத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை.
இதனால் அவர் கார்த்திக்கின் அண்ணனான, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளார்.
இதனால் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அண்ணனுக்கு ஆதரவாக, கார்த்திக் சமீபத்தில் அனுகிரிப்பள்ளி சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், நாராயணப்பாவின் மகனான ரவுடி பிரதாப், 22, என்பவர் கார்த்திக்கை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
நேற்று முன்தினம் பேரிகை அருகே கார்த்திக்கை, பிரதாப் தலைமையிலான கும்பல் வழிமறித்து கொலை செய்துள்ளது.
பிரதாப் மீது, கர்நாடகா மாநிலம், மாஸ்தி ஸ்டேஷனில் ஒரு கொலை மற்றும் மாலுார் ஸ்டேஷனில் ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கூறினர்.

