ADDED : ஜன 05, 2026 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தெற்கு ஒன்-றிய, தி.மு.க., சார்பில், மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமை வகித்தார்.
மருதாண்டப்-பள்ளி கிராமத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாற்றுகட்சியிலிருந்து விலகி, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில், தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநில இளைஞ-ரணி துணை செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, துணை அமைப்பாளர் ராமசந்-திரன், ஒன்றிய துணை செயலாளர் முனிசந்திரன் உட்பட பல பங்கேற்றனர்.

