ADDED : ஏப் 18, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், மாற்று கட்சி-யினர் தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாத் முன்னிலையில், 150க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளிலிருந்து விலகி, தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். வேப்பன-ஹள்ளி தொகுதி பொறுப்பாளர் இளைய ராஜா, கிருஷ்ணகிரி கிழக்கு இளைஞரணி அமைப்பாளர் தினேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், தொ.மு.ச., துணை செயலாளர் கிருஷ்ணன் உட்-பட பலர் பங்கேற்றனர்.
