/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூட்டணி காங்., கட்சி வேட்பாளருக்காக தேர்தல் அலுவலகத்திற்கு தி.மு.க., பூஜை

ADDED : மார் 22, 2024 07:12 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, காங்., கட்சி வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே, கூட்டணி கட்சிக்காக தேர்தல் அலுவலகம் அமைக்க, தி.மு.க.,வினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தி.மு.க., கூட்டணியில் உள்ள, காங்., கட்சி, கிருஷ்ணகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கிருஷ்ணகிரி தொகுதியை, காங்.,க்கு ஒதுக்கினாலும், வேட்பாளர் யார் என நேற்று மாலை வரை அறிவிக்கவில்லை. கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ் நேற்று கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதையடுத்து, தி.மு.க.,வும் தங்கள் பங்குக்கு உடனடியாக, காங்., வேட்பாளருக்கான தேர்தல் அலுவலகத்தை திறக்க முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை, 11:30 மணிக்கு, கிருஷ்ணகிரி பெங்களூரு சாலை, சென்ட்ரல் தியேட்டர் அருகில் உள்ள காலி இடத்தில், காங்., வேட்பாளருக்கான கட்சி அலுவலகம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவசர, அவசரமாக பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தது. தி.மு.க., - காங்., நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.