/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க., அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ADDED : டிச 04, 2024 01:36 AM
கிருஷ்ணகிரி, டிச. 4-
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். நீதிமன்ற ஆணையை ஏற்று கமிஷன் பிடித்தம் செய்யும் காலத்தை, 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல், பொதுத்துறை ஓய்வூதியர்களுக்கும் பணிக்கொடை உச்ச வரம்பை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில், மாவட்ட துணைத்தலைவர் சரவணபவன், செயலாளர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசலு, அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் பொருளாளர் முனிரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.