/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாக்கடை கால்வாய், குடிநீர் வசதி கேட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

ADDED : அக் 01, 2025 01:57 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் திட்டப்பணிகளை துவக்கி வைக்க, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., சென்றார். அப்போது சந்தாபுரம் பஞ்.,க்கு உட்பட்ட பகுதி பெண்கள், அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேல், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பட்டா இன்றி இப்பகுதியில் வசிக்கிறோம். தற்போது பலருக்கு பட்டா வழங்கப்பட்ட போதும் எங்களுக்கு வழங்கவில்லை. அதேபோல எங்கள் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்த போதும், சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என முறையிட்டனர்.
சம்பந்தப்பட்ட பஞ்., செயல் அலுவலரை தொடர்பு கொண்ட மதியழகன் எம்.எல்.ஏ., அடுத்த சில தினங்களில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் சாக்கடை கால்வாய், குடிநீர் கோரி, அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறுவதாகவும் கூறி சென்றார்.
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், காவேரிப்பட்டணம், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.