டெங்கு பாதிப்பு உறுதியானால் சுயமாக மருந்து எடுத்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தல்
டெங்கு பாதிப்பு உறுதியானால் சுயமாக மருந்து எடுத்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தல்
ADDED : ஆக 31, 2026 02:35 AM

கிருஷ்ணகிரி: கடந்த, 8 மாதங்களில், 239 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பருவமழை போதிய அளவு பெய்யாவிட்-டாலும் கொசு உற்பத்தி அதிகரித்து, அதன் மூலம் நோய் தாக்-கமும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலும் ஆங்-காங்கே பரவி வருகிறது. இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு, 475 டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகியிருந்தது. இந்த ஆண்டில் இதுவரை, 239 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், ஓசூர் மாநகராட்-சியில் மட்டும், 98 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. கொசுப்புழு ஒழிப்பு மற்றும் புகை மருந்து அடித்தல் பணிகளில் பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம், பாதிப்புகளை குறைக்க, மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகி-றது.
ஏற்கனவே, 10 வட்டாரங்கள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், 483 கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், சுயமாக மருந்து எடுத்து கொள்ள வேண்டாம். காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள சுகாதார அதிகாரிகளை அணுக வேண்டும்.
மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பணி-யாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் நுழைவதை மக்கள் தடுக்கக்கூ-டாது. தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிற நீர் சேமிப்பு அமைப்பு-களை மூடி வைக்க வேண்டும். மேலும், தண்ணீர் தேங்கி, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறும் பயன்-படுத்தப்படாத பாட்டில்கள் மற்றும் கொள்கலன்களை அப்புறப்ப-டுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
