கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை கடித்து கொன்ற நாய்கள்
கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை கடித்து கொன்ற நாய்கள்
ADDED : ஜன 25, 2026 04:44 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே, ஆட்டு கொட்டகையில் அடைத்து வைத்-திருந்த, 5 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மங்கல்பட்-டியை சேர்ந்தவர் தேவன், 60. கூலித்தொழிலாளி. இவர், ஆடு-களை வளர்த்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சல் முடிந்து வந்த, 5 ஆடுகளை வீட்டருகில் உள்ள கொட்-டகையில் அடைத்தார். அப்பகுதியில் நடந்த கோவில் திருவி-ழாவிற்கு குடும்பத்தினருடன் சென்ற அவர், நள்ளிரவில் வீடு திரும்பினார். நேற்று அதிகாலை, 5:30 மணியளவில் நாய்கள் சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டு கொட்டகையில் இருந்த ஆடுகளை, தெருநாய்கள் கடித்து குதறி கொன்று சாலையில் இழுத்துச் சென்றன.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தெருநாய்கள் தொல்லை இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் சிறு-வர்களை கடித்து வருகிறது. இது குறித்து புகாரளித்தாலும், எந்த அதிகாரிகளும்
நடவடிக்கை எடுப்பதில்லை' என்றனர்.
