/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அழகேஸ்வரா கோவிலுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை
/
அழகேஸ்வரா கோவிலுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை
ADDED : ஜூலை 31, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்திலுள்ள ஐராவதேஸ்வரா கோவிலில், சிவபெருமான் இரு மூலவர்களாக காட்சி தருகிறார்.
முதலில் காமாட்சி சமேத ஐராவதேஸ்வரா சுவாமி அடுத்தது அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரா சுவாமி. பழமையான இக்கோவிலில், அத்திமுகம் பஞ்., தலைவரும், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழு தலைவருமான சுரேஷ் சுவாமி தரிசனம்செய்தார். அப்போது, அழகேஸ்வரா சுவாமி சேவா அறக்கட்டளைக்கு, 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். அதை, அறக்கட்டளை தலைவர் மகேஷ்குமார் மற்றும் சிவசங்கர், தீட்சிதர் வேணுகோபால், நாகபூஷனம், முனிராஜ், புருஷோத்தமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

