காணொளி காட்சியில் கனவு மெய்ப்படும்: நிகழ்ச்சியில் கையேடு வெளியீடு
காணொளி காட்சியில் கனவு மெய்ப்படும்: நிகழ்ச்சியில் கையேடு வெளியீடு
ADDED : மார் 07, 2026 09:36 AM

கிருஷ்ணகிரி: சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில், காணொளியில் 'தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்' கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி யில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், கிருஷ்ண கிரி காங்., - எம்.பி., கோபிநாத், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன் (பர்கூர்), பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் 'என் ஊரு என் கனவு 2030 கிருஷ்ணகிரி' என்ற கையேட்டை வெளியிட்டனர்.தொடர்ந்து கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் தன்னார்வலர்கள், அனைத்து குடும்பங்களின் எதிர்கால கனவுகளை அறிவதற்காக வீடு வீடாக சென்று, பொதுமக்களை சந்தித்து, அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும், அவர்களின் எதிர்பார்ப்புகள், எதிர்கால கனவுகள் ஆகியவை குறித்தும் கேட்டறிந்து பதிவு செய்துள்ளனர்.
இந்த கையேட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளின் விபரங்கள் உள்ளன. மேலும் பொது சுகாதாரம், மின்னணு கல்வி நிர்வாக அமைப்பு, கிராம, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட, 10 கனவுகளை முக்கிய இலக்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
