ADDED : ஜூன் 18, 2026 04:52 AM
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே புலியூரை சேர்ந்தவர் மதன்கலாம், 21. ஓசூரில் தனியார் மினி பஸ்சில் கண்டக்டராக உள்ளார்; கடந்த, 15ம் தேதி மாலை, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் வைத்து, இவருக்கும், மற்றொரு தனியார் மினி பஸ் டிரைவரான, ஓசூர் பேரண்டப்-பள்ளியை சேர்ந்த சபரி, 36, என்பவருக்கும் இடையே, பஸ்களை இயக்குவது தொடர்பாக டைமிங் பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர
மடைந்த டிரைவர் சபரி, கண்டக்டர் மதன்க-லாமை தகாத வார்த்தையால் திட்டி, கைகளால் தாக்கினார்.
சபரி புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்ப-திந்து, டிரைவர் சபரியை நேற்று முன்தினம் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். மேலும், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த தனியார் மினி பஸ் கண்டக்டர் சந்தோஷ், ஓசூர் அண்ணா நகரை சேர்ந்த, மினி பஸ் உரிமை-யாளர் தனுஷ் ஆகியோர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
