ADDED : ஏப் 30, 2026 03:01 AM
அ நிறம் | அளவு
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் - ஓசூர் சாலையில் உள்ள பைரமங்கலம் பகுதியில், மின்கம்பத்தின் மீது கடந்த, 24ம் தேதி மாலை, அவ்வழியாக சென்ற லாரி மோதியது.
இதில், 30,820 ரூபாய் மதிப்புள்ள மின்கம்பம் சேதமானது. இது தொடர்பாக, கெலமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் முனிராஜ், 52, கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்படி, மின்கம்பத்தை சேதப்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவரான, திருவள்ளூர் மாவட்டம், கொளத்துார் புரு-ஷோத்தமன் நகரை சேர்ந்த ஜெயமுருகன், 60, என்பவரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.
