தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தனியார் பஸ்கள் டைமிங் பிரச்னையால் தகராறு வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி

தனியார் பஸ்கள் டைமிங் பிரச்னையால் தகராறு வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி

தனியார் பஸ்கள் டைமிங் பிரச்னையால் தகராறு வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி


ADDED : மார் 09, 2026 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகலுார்; கர்நாடகா மாநிலம், மாலுாரிலிருந்து ஓசூர் நோக்கி நேற்று மாலை எஸ்.வி.டி., என்ற தனியார் பஸ் சென்றது.

அதே மார்க்கத்தில், கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத்திற்கு சொந்தமான சி.கே.என்., என்ற தனியார் பஸ்சும் வந்தது. ஓசூர் அடுத்த பாகலுார் அருகே உளியாளம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, முன்னால் வந்த எஸ்.வி.டி., பஸ் டிரைவருக்கும், சி.கே.என்., பஸ் டிரைவ-ருக்கும் டைமிங் தகராறு ஏற்பட்டது. முன்கூட்-டியே புறப்பட்டு வந்து பயணிகளை ஏற்றுவதாக கூறி, இரு பஸ் டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, சி.கே.என்., பஸ் டிரைவர் சாலையில் பஸ்சை நிறுத்தி விட்டு வாக்குவாதம் செய்தால், மாலை, 5:45 முதல், 6:05 மணி வரை, பாகலுார் - ஓசூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் மட்-டுமின்றி, இரு பஸ்களில் இருந்த பயணிகளும் கடும்

அவதியடைந்தனர்.

எஸ்.வி.டி., பஸ் டிரைவரை, சி.கே.என்., பஸ் டிரைவர் அடிக்க பாய்ந்தார். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் சத்தம் போட்டதால், இரு பஸ் டிரைவர்களும் வேறு வழி-யின்றி, பஸ்சை எடுத்து, ஓசூர் நோக்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us