/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்ணிடம் தகராறு செய்த 'போதை' தொழிலாளி கைது
/
பெண்ணிடம் தகராறு செய்த 'போதை' தொழிலாளி கைது
ADDED : ஆக 29, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி :சூளகிரி அடுத்த காளிங்காவரத்தை சேர்ந்தவர் சுகுணா, 25. அதே பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ், 28, கூலித்தொழிலாளி. திம்மராஜூக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிபோதையில் அவர் சுகுணாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த, 19ல், சுகுணா வீட்டருகே குடிபோதையில் நின்ற அவர், சுகுணாவை ஆபாசமாக பேசியுள்ளார். இதை தட்டி கேட்ட அவரையும் சரமாரியாக தாக்கி சென்றார். சுகுணா புகார் படி, சூளகிரி போலீசார், திம்மராஜை கைது செய்தனர்.