ADDED : ஜூலை 31, 2026 02:03 AM

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த தளி, அரசு கலை மற்றும் அறி-வியல் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் ராஜா தலைமையில் நடந்தது.
இதில், தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சாவித்திரி பேசுகையில், ''மாணவர்கள் இன்றைய சூழலில் மொபைலுக்கு அடிமையாகும் சூழல் உள்ளது. அதனால், மனம் கட்டுப்பாட்டில் இல்லாமல், குற்றச்செயல்களுக்கோ, போதை பழக்கத்திற்கோ செல்லும் வாய்ப்பு உள்ளதால், குடும்பத்திற்கும், சமுதாயத்-திற்கும் பெரும் ஏமாற்றம். ஆகவே மாணவர்கள் சுய சிந்தனை-யுடன் செயல்பட, நல்ல நுால்களை வாசிக்க பழக வேண்டும். நண்பன் தவறு செய்கிறபோது அவனை திருத்தி, நல்வழியில் கொண்டு வர வேண்டும். மனக்கட்டுப்பாடு, சுய ஒழுக்கத்துடன், நீங்கள் வாழ்ந்து, வாழ்வில் வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.
வழக்கறிஞர் லூர்துசாமி, கணினி துறைத்தலைவர் குமரன், பேராசிரியர்கள் ரகு, சரவணகுமார், கவுரவ விரிவுரையாளர்கள் தன்வீர், பூபாலன், பெற்றோர் கழக ஆசிரியர்கள், மாணவ, மாண-வியர் கலந்து கொண்டனர்.
