ADDED : ஆக 28, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:ஓசூர்,
பிருந்தாவனம் நகரை சேர்ந்தவர் முகமது சாத், 18. அதே பகுதியில் பழைய
இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 25ம் தேதி மதியம் சுண்ணாம்பு
ஜிபி அருகே பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது குடிபோதையில் எதிரில் வந்த
ஓசூர், ஈஸ்வர் நகரை சேர்ந்த டிரைவரான பிரவீன், 26, என்பவர், பைக்கை
மறித்து முகமது சாத்தை கட்டையாலும், கைகளாலும் அடித்துள்ளார்.
படுகாயமடைந்த முகமது சாத், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றார். அவர் புகார் படி, ஓசூர் ஹாட்கோ போலீசார், பிரவீனை கைது
செய்தனர்.
