ADDED : ஜூன் 27, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக, ஐ.பி.எஸ்., அதிகாரி அக்சய் அணில் வாகரே பணியாற்றி வந்தார்;
இவர் பதவி உயர்வு மூலம், திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், ஓசூர் உட்கோட்ட ஏ.எஸ்.பி., பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக இருந்த பாலகிருஷ்ணன், ஓசூர் உட்கோட்டத்திற்கு மாற்-றப்பட்டார்.அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். ஓசூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்-பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் அரசியல் கட்சி-யினர், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனை நேரில் சந்-தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர், ஓசூர் மதுவி-லக்கு, மத்திகிரி, பாகலுார் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
