ADDED : செப் 26, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில், விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களை மிரட்டி, பணம் வசூல் செய்யும் உரிகம் வனச்சரகர் முரளியை கண்டித்து, இ.கம்யூ., கட்சி சார்பில், உரிகம் வனச்சரக அலுவலகம் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாவட்ட செயலாளர் பழனி தலைமை வகித்தார். தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகு-மைய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர். வனச்சரகர் முரளி மீது, குழு அமைத்து விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, வட்ட செயலாளர் முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.