ADDED : மே 30, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி :பர்கூர் தாலுகா பட்லப்பள்ளி பஞ்., சிவபுரம் கிராமத்தில், இ.கம்யூ., கட்சியின் புதிய கிளை துவக்க கூட்டம் நடந்தது. புதிய உறுப்பினர் சரிதா தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கண்ணு, அரசியல் அமைப்பு குறித்து பேசினார்.
வட்ட துணை செயலாளர் சதீஷ், கிளை செயலாளர் சார்லஸ் ஆகியோர், புதிய கிளையில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தனர். மேலும், ஜிஞ்சம்பட்டி அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த மாணவி தேவதர்ஷினி, 500க்கு, 406 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.