/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருமணத்திற்கு சென்றபோது கார் கவிழ்ந்து முதியவர் பலி
/
திருமணத்திற்கு சென்றபோது கார் கவிழ்ந்து முதியவர் பலி
திருமணத்திற்கு சென்றபோது கார் கவிழ்ந்து முதியவர் பலி
திருமணத்திற்கு சென்றபோது கார் கவிழ்ந்து முதியவர் பலி
ADDED : நவ 23, 2025 12:53 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே, கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஹார்டுவேர் கடை நடத்தியவர்
பலியானார். குழந்தை உள்பட, 4 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, கொட்டிகிரியை சேர்ந்தவர் முகமது லோகன் வாலா, 61, ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். இவர், சென்னையில் நடக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று, தன் குடும்பத்தினருடன் சென்னைக்கு எர்டிகா காரில் சென்றார். காரை பெங்களூருவை சேர்ந்த கூசை, 32 என்பவர் ஓட்டினார்.
காலை, 10:00 மணியளவில், பர்கூர் அண்ணாநகர் அருகே கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முகமது லோகன் வாலா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி ஷகிரா, 60, கார் டிரைவர் கூசை, உறவினர்கள், அம்மத்துல்லா மற்றும் ஒரு வயது பெண் குழந்தை அலிகா உள்பட நால்வர் காயமடைந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றனர். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

