தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ த.வெ.க., - காங்., வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு

த.வெ.க., - காங்., வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு

த.வெ.க., - காங்., வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு


ADDED : ஏப் 06, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:கிருஷ்ணகிரி, 5 ரோடு ரவுண்டானா முதல் ஆர்.டி.ஓ., அலுவ-லகம் வரை, த.வெ.க.,வினர் நேற்று முன்தினம் தேர்தல் விதிமு-றைகளை மீறி, ஊர்வலமாக வந்ததாக பறக்கும் படை பிரிவு அதி-காரி முனிகிருஷ்ணன், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி, த.வெ.க., வேட்பாளர் முகுந்த் பாண்-டியன், 41, மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

*ஓசூர் சட்டசபை தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டி-யிடும், அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், 45, நேற்று முன்தினம் காலை வேட்புமனு தாக்கல் செய்ய, ஓசூர் ராம்-நகர் கோட்டை மாரியம்மன் கோவிலிருந்து, சப்-கலெக்டர் அலு-வலகம் வரை, தன் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார். உரிய அனுமதி பெறாததால், போலீஸ் எஸ்.ஐ., சிவசந்தர், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வேட்பாளர் வடிவேல் மற்றும் 120 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.*ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்., கட்சி சார்பில், டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்பு-சாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள காமராஜ் சிலைக்கு, முன் அனுமதியின்றி மாலை அணிவித்து, பட்டாசு வெடித்துள்ளார். தேர்தல் விதிமு-றைகளை மீறியதாக, எஸ்.ஐ.,மோகன்ராஜ் புகார் படி, வேட்பாளர் குப்புசாமி, 75, மற்றும் 15 பேர் மீது, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

*கெலமங்கலம் அருகே வெள்ளிச்சந்தையை சேர்ந்தவர் முனி-யப்பா மனைவி லட்சுமி, 48. கூலித்தொழிலாளி; அவரது வீட்டு சுவரில், அ.தி.மு.க., சின்னம் வரையப்பட்டது. இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில் லட்சுமி புகார் செய்தார். அதன்படி, தேர்தல் விதிமுறை மீறி சின்னம் வரைந்ததாக, நாகமங்கலம் அருகே கூத்தனப்பள்ளியை சேர்ந்த முருகன், பாலப்பா ஆகிய இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us