ADDED : ஏப் 26, 2026 06:26 AM
நமது நிருபர்
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச், 15ம் தேதி முதல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லுதல், வழங்குதலை கண்காணித்து தடுக்க, ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், 72 பறக்கும் படைகள், 72 நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு போலீஸ், ஒரு வீடியோகிராபர், அரசு அதிகாரி ஒருவர், டிரைவர் உட்பட ஐந்து பேர் என, 144 குழுக்களில், 576 பேர் இடம் பெற்றனர்.
இவர்கள் தலா, 8 மணி நேரம் என சுழற்சி முறையில் வாகன தணிக்கை, புகார்களின் பேரில் குறிப்பிட்ட இடங்களில் தணிக்கை, சோதனை சாவடிகளில் சோதனை செய்தனர். கடந்த, 23ல் தேர்தல் முடிந்து, இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதன் கீழ், அனைத்து அதிகாரிகளும் தங்கள் பணி குறித்து அறிக்கை, ஆவணங்களை தேர்தல் பிரிவில் தாக்கல் செய்தனர். பின், அனைத்து குழுவும் கலைக்கப்பட்டு, அவரவர் பணி செய்யும் துறை சார்ந்த பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
