/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல்களுக்கான கண்காணிப்பு குழு கூட்டம்
/
தேர்தல்களுக்கான கண்காணிப்பு குழு கூட்டம்
ADDED : மே 19, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அணுகக்கூடிய தேர்தல்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு, 2-ம் காலாண்டு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவ-லரும், கலெக்டருமான தினேஷ்குமார் தலைமை வகித்து பேசு-கையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்
திறனாளி வாக்காளர்களும் தேர்தலின் போது எவ்வித
சிரமமின்றி வாக்களிக்க செய்ய ஏதுவாக மாவட்டத்தில் எடுக்கப்-படும் நடவடிக்கைகளை
கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், ஆட்சியர்
தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் தற்போது வரை, 15,317 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கென சக்ஸாம் மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் பிரத்யேக-மாக உருவாக்கியுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அடையாளம் காண்பது, ஓட்டுப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்
வரிசையில் நிற்காமல் எளிதாக வாக்களிப்பது, அனைத்து
ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம் அமைப்பது, உள்ளிட்ட ஏற்பாடுகளை அலுவலர்கள் முறையாக செய்ய வேண்டும்,'' என்றார்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனஞ்-செயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முரு-கேசன், மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், தேர்தல் தாசில்தார் சம்பத் மற்றும் தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.