ADDED : ஏப் 10, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை :தளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி குழுவினர், அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்தேவனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, சாலையோரம் இருபுறமும் உள்ள சுவற்றில், உரிய அனுமதி பெறாமல், இ.கம்யூ., கட்சியின் கதிர் அரிவாள் சின்னங்கள் வரையப்பட்டிருந்தன. இது தொடர்பாக, ஆறுமுகம் புகார் படி, சின்னங்கள் வரைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது, தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
