ADDED : பிப் 04, 2025 05:42 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் மனோகரன், 29; எலக்ட்ரீஷியன். இவர் மனைவி நந்-தினி, 25. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த, 2015 ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மகன், மகள் உள்ளனர். நேற்று மாலை, 6:30 மணிக்கு, ஓசூர் அருகே கசவுகட்டா பகுதியி-லுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அருகே, தலையில் பலத்த காயத்துடன் மனோகரன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர்,
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஆம்-புலன்ஸ் வருவதற்குள் மனோகரன்
உயிரிழந்தார். சம்பவ இடம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இவரை தலையில் தாக்கி கொலை செய்த மர்ம
நபர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. அவரை மர்ம நபர்கள் மதுபோதையில் கொலை செய்திருக்கலாம்
என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அப்பகுதியில் நிறுத்-தியிருந்த அவரது ஸ்கூட்டரை போலீசார்
கைப்பற்றினர். யாருட-னாவது அவருக்கு முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்தில், ஹட்கோ போலீசார்
தனிப்படை அமைத்து, விசாரித்து வருகின்றனர்.

