/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2024 01:28 AM
மின்வாரிய ஊழியர்கள்
கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, டிச. 11-
மின் வினியோக நிறுவனங்களை தனியாருக்கு விடுவதை எதிர்த்து, போராடி வரும் சண்டிகர், உத்திர பிரதேச மாநில மின்வாரிய தொழிலாளர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமலாக்க மத்திய அரசால் நிர்ப்பந்த படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பவர் கிரீடுக்கு சொந்தமான, துணை மின்நிலையங்கள் அனைத்தும் முழுமையாக அவுட்சோர்சிங் விடுவதற்கான, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து போராடி வரும், மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சி.ஐ.டி.யு., தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜீவா, அண்ணா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், ஏ.இ.எஸ்.யூ., மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

