/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2025 08:04 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளை தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் முனிரத்தினம், இணை செயலாளர்கள் நந்தியப்பன், கிருஷ்ணன், சி.ஐ.டி.யு., தலைவர் துரை, முனிசாமி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த, 2024ல், ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசு உத்திரவாதத்துடன் கூடிய ஒப்பந்தமாக மாற்ற வேண்டும். ஊதியக்குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒய்வூதிய திட்ட சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும்.
கடந்த, 2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பினர்.