/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொட்டு விடும் உயரத்தில் ஆபத்து அலட்சியம் காட்டும் மின்வாரியம்
/
தொட்டு விடும் உயரத்தில் ஆபத்து அலட்சியம் காட்டும் மின்வாரியம்
தொட்டு விடும் உயரத்தில் ஆபத்து அலட்சியம் காட்டும் மின்வாரியம்
தொட்டு விடும் உயரத்தில் ஆபத்து அலட்சியம் காட்டும் மின்வாரியம்
ADDED : நவ 05, 2025 01:38 AM
ஓசூர், ஓசூர் ஒன்றியம், தொரப்பள்ளி பஞ்., ஆர்.ஆர்., கார்டன் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மெயின் தெருவிலுள்ள ஒரு மின்கம்பத்தில், தெருவிளக்குகளை ஆன் செய்ய, மின் சுவிட்ச் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு கூட எட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக உள்ளது.
மேலும், சுவிட்ச் பாக்ஸ் மூடி உடைந்து, ஒயர்கள் வெளியே தெரிகிறது. இதனால் மழை காலங்களில் உள்ளே புகும் மழைநீரால், மின்கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஓசூர் சிப்காட் பேஸ் - 2 துணை மின்நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தும், சுவிட்ச் பாக்சை மாற்றி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இப்பகுதியில், போதிய மின்கம்பம் அமைக்காமல் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால், குறுக்கு தெருக்களில் மிகவும் தாழ்வாக உயர்மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. மேலும், இரு மின்கம்பங்கள் சாய்ந்துள்ள போதும், அதை மாற்றாமல், மற்றொரு கம்பம் வைத்து முட்டு மட்டுமே கொடுத்துள்ளனர். மின்வாரிய அலட்சியத்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

