/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி
/
மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி
ADDED : ஜூன் 14, 2025 06:53 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, காரப்பட்டு மின்-துறை அலுவலகத்தில், மஸ்துாராக பணிபுரிந்து வந்தவர் அத்திப்-பள்ளம் கிராமத்தை சேர்ந்த சக்கரபாணி, 59. இவர், நேற்று மாலை 3:00 மணியளவில், கருமாண்டபதி கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, மின்மாற்றியில் இருந்து மின்-சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஊத்தங்கரை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சக்கரபாணிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சக்கர-பாணி, 17 நாளில் ஓய்வு பெறும் நிலையில் சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.