/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு; இயந்திரங்கள் பிரித்தனுப்பும் பணி துவக்கம்

ADDED : மார் 22, 2024 07:12 AM
கிருஷ்ணகிரி : லோக்சபா தேர்தலையொட்டி மாவட்டத்திலுள்ள, 1,888 ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வழங்கும் பணி துவங்கியது.
லோக்சபா தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல வளாகத்திலுள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் இருந்து, இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு துவக்கி வைத்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி, ஊத்தங்கரை என மொத்தம், 6 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், பிரித்து அனுப்பும் பணி துவங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 1,888 ஓட்டுச்சாவடிகளுக்கு, 2,267 பேலட் யூனிட், 2,267 கன்ட்ரோல் யூனிட், 2,455 விவி பேட் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட விபரங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பகிரப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.