ADDED : செப் 07, 2026 01:58 AM

அஞ்செட்டி:அஞ்செட்டி அருகே குட்டையில், வெயிலின் தாக்கத்தை குறைக்க, யானைகள் கூட்டம் ஆனந்த குளியல் போட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நாட்றாம்பாளைம் அடுத்த மஞ்சு-மலை அருகே வனப்பகுதிக்குள் உள்ள குட்டையில், நேற்று முன்-தினம், 12க்கும் மேற்பட்ட யானைகள், தங்களது குட்டிகளுடன், குட்டையில் நீர் அருந்தி விட்டு, ஆனந்த குளியல் போட்டன. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், தங்களது மொபைல்-போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.வெயிலின் தாக்கத்தால் நீண்ட நேரமாக குட்டையில் விளையா-டிய யானைகள், பின்னர் வனப்பகுதி நோக்கி சென்றன. கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனத்திலிருந்து, ஆண்டுதோறும் செப்., அல்லது அக்., மாதங்களில், 200க்கும் மேற்பட்ட யானைகள், ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ஓசூர், ராயக்கோட்டை வனச்சர-கங்களுக்கு இடம் பெயரும். யானைகள் இடம் பெயர்வு துவங்க உள்ளதால், வனத்துறையினர், தமிழக எல்லை பகுதியில், தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.
