/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையை கடந்த யானைகள் ராயக்கோட்டை அருகே பரபரப்பு
/
சாலையை கடந்த யானைகள் ராயக்கோட்டை அருகே பரபரப்பு
ADDED : பிப் 23, 2024 04:23 AM
ஓசூர்: ராயக்கோட்டை அருகிலுள்ள கிராம புற சாலைகளை கடந்து சென்ற யானைகளால், பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரம், போடூர்பள்ளம் வனப்பகுதியில் கடந்த, 15 நாட்களாக இரு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்நிலையில், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம், 2 யானைகள் ராயக்கோட்டை வனப்பகுதியிலிருந்து சாலையை கடந்து, போடூர் வனப்பகுதிக்குள் சென்று, அங்கு ஏற்கனவே இருந்த இரு யானைகளுடன் சேர்ந்தன. பின், 4 யானைகளும் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசமாக்கின. அவற்றை விரட்ட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையால், ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையிலான வனத்துறையினர், யானைகளை போடூர்பள்ளம் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
நேற்று காலை, 9:30 மணிக்கு, அந்த யானைகள் ராயக்கோட்டை சாலை, சானமாவு கிராமத்தை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் சென்றன. அவற்றை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில், நேற்று மாலை வனத்துறையினர் ஈடுபட்டனர்.