தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சாமை ஏரியில் யானை கும்மாளம்

சாமை ஏரியில் யானை கும்மாளம்

சாமை ஏரியில் யானை கும்மாளம்


ADDED : ஏப் 13, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்-கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெட்டமுகிலாளம் செல்லும் சாலையோரம், சாமை ஏரி உள்ளது. இங்கு கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில், யானைகள் கூட்டம் தினமும் சாமை ஏரியில் தண்ணீர் குடிப்பதும், கும்மாளமிடுவதையும் வழக்கமாக கொண்-டுள்ளன. நேற்று காலை சாமை ஏரியில் ஒற்றை யானை தண்ணீர் குடித்து விட்டு, கும்மாளமிட்டது.

அதை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ, புகைப்-படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தினமும் யானைகள் சாமை ஏரிக்கு தண்ணீர் குடிக்க வருவதால், பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் பயணிப்போர் பாதுகாப்-பாக செல்லுமாறும், யானைகள் மற்றும் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும்போது, அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us