ADDED : ஆக 22, 2026 05:55 AM
ஓசூர்; ஓசூர் மாநகராட்சி, நேதாஜி நகரில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிமை விழிப்புணர்வுக்கான குழந்தைகள் இயக்கம் (சி.எம்.சி.ஏ.,) ஒத்துழைப்-புடன், அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர், 'எங்க ஓசூர் எங்க பெருமை' என்ற பெயரில், விழிப்புணர்வு மற்றும் சமூக பணிகளை மேற்கொண்டனர்.
அப்பகுதி மக்களுடன் இணைந்து, சுற்றுப்புற துாய்மை, பொது இடங்களை பராமரித்தல், சுகா-தாரம் ஆகிய பணிகளை மேற்கொண்ட மாண-வர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்து, சமூக பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார். சி.எம்.சி.ஏ., நிர்வாகிகள் நந்தகுமார், பவானிரமேஷ், மாதப்பன், கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தினேஷ்பாபு, கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ் உட்பட பலர் பங்-கேற்றனர்.
