/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆங்கில புத்தாண்டு பிறப்பு; கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
ஆங்கில புத்தாண்டு பிறப்பு; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறப்பு; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறப்பு; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 02, 2026 07:26 AM

கிருஷ்ணகிரி: ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நேற்று, 2026 ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவி லில், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மாரியம்மன், உற்சவர் மற்றும் கோவில் வளாகம் என மொத்தம், 50 லட்சம் ரூபாய் நோட்டில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதிவிநாயகர் கோவில் தெருவிலுள்ள முத்து மாரியம்மன் கோவில், பழையபேட்டை அங்காளம்மன் கோவில், லட்சுமி நாராயணசுவாமி கோவில், நேதாஜி சாலை சமயபுரத்து மாரியம்மன் கோவில், பழையபேட்டை பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில், கவீஸ்வரன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில், காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், ஐகுந்தம் சீனிவாச பெருமாள் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது.
இதேபோல், புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு, 666 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. காந்தி சாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வினை தீர்த்த விநாயகர் கோவில், காந்தி நகர் வலம்புரி விநாயகர் கோவில், டான்சி வளாகத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினை தீர்த்த விநாயகர் கோவில் என, பல்வேறு கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

