sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

14வது ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

/

14வது ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

14வது ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

14வது ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு


ADDED : நவ 24, 2025 01:00 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகே, 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை கொண்டு வரப்பட்டது. அதற்கு ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கொம்பு, பம்பை, சேவையாட்டம், தப்-பாட்டம், புரவியாட்டம், கோலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புற கலைஞர்கள், பள்ளி மற்றும் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் என, 1,000க்கும் மேற்-பட்டோர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இதில், கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர், ஊர்வலமாக சென்று, மாவட்ட விளையாட்டு அரங்கில், ஹாக்கி உலக கோப்-பையை அறிமுகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, மாணவியரின் பரத நாட்டியம், என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியரின் நடனம் ஆகியவை நடந்தது.பின்னர் கலெக்டர் கூறியதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கு, 14வது சர்வதேச அளவிலான உலக கோப்பை ஹாக்கி போட்டி, சென்னை மற்றும் மதுரையில் வரும், 28 முதல் டிச., 10 வரை நடக்கிறது. இதில், 24 நாடு-களின் அணிகள் பங்கேற்கின்றன. அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதி சுற்று, சென்னையில் வரும் டிச., 9 மற்றும், 10ல் நடக்கிறது. உலக கோப்பையை, தமிழக முதல்வர் வழங்குகிறார். இப்போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக கோப்பை அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்து செல்லப்-படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 34வது மாவட்டமாக, கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளது. இந்த உலக கோப்பைக்கு சிறப்-பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜமுருகன், பி.டி.ஓ., உமாசங்கர், மாவட்ட ஹாக்கி யூனிட் துணைத்தலைவர்கள் இளங்கோ, குமரன், செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us