/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசுப்பள்ளியில் சுற்றுப்புற துாய்மை விழிப்புணர்வு முகாம்
/
அரசுப்பள்ளியில் சுற்றுப்புற துாய்மை விழிப்புணர்வு முகாம்
அரசுப்பள்ளியில் சுற்றுப்புற துாய்மை விழிப்புணர்வு முகாம்
அரசுப்பள்ளியில் சுற்றுப்புற துாய்மை விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 15, 2025 01:24 AM
ஓசூர், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற துாய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
பள்ளியின் முன்னாள் மாணவரும், மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன் கலந்துகொண்டு பேசுகையில், 'தற்போது சுற்றுப்புற துாய்மை என்பது அடிப்படையில் இருந்து வரவேண்டும்.
அதை பள்ளி மாணவர்களாகிய நீங்கள் உணர வேண்டும். உங்களிடம் கூறும் சுற்றுப்புற துாய்மை மற்றும் சுகாதார வழிமுறைகள் குறித்து பெற்றோர், பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்து, மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ள அனைவரின் பங்கேற்பும் அவசியமாகிறது,'' என்றார்.
மாநகராட்சி நகர் நல அலுவலர் அஜிதா, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் துணிப்பையின் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் உதயகுமார், ஓசூர் வட்டார சுற்றுப்புற சூழல் ஆய்வாளர் பாலாஜி, ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.