ADDED : செப் 19, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரபிக் கான், 45. டிரைவர்; இவர் பெங்களூருவில் இருந்து, கிருஷ்ணகிரி நோக்கி புதிய ஈச்சர் லாரியை ஓட்டி சென்றார். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் சென்ற போது, லாரியை நிறுத்தி விட்டு இயற்கை உபாதையை கழிக்க சென்றார்.
திரும்பி வந்து லாரியை ஆன் செய்த போது திடீரென தீப்பிடித்தது. டிரைவர் ரபிக் கான் கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால், லாரி
முழுவதும் எரிந்து நாசமானது. ஹட்கோ போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

