தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'எண்ணேகொள் திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

'எண்ணேகொள் திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

'எண்ணேகொள் திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'


ADDED : ஜூன் 05, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மற்றும் தர்ம புரி மாவட்டங்களி-லுள்ள வறட்சியான பகுதிகளிலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்க ஏதுவாக, 275 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. குருபரப்பள்ளி அருகே சிக்காரிமேட்டில் தொட்டி பாலம் அமைக்கும் பணியை, கிருஷ்ணகிரி, த.வெ.க., - எம்.எல்.ஏ., முகுந்தன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணே-கொள்புதுார் அணைக்கட்டு வழியாக தென்-பெண்ணை ஆற்றில் இருந்து, வெள்ளக்காலங்-களில் வரும் உபரிநீரை, வலது மற்றும் இடதுபுற கால்வாய் அமைத்து, கிருஷ்ணகிரி மற்றும் தர்ம-புரி மாவட்டத்திலுள்ள வறட்சியான பகுதிகளி-லுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல, எண்ணேகொள் கால்வாய் திட்டம் செயல்படுத்-தப்பட்டு வருகிறது.

இத்திட்டப்பணிகள் தற்போது வரை, 48 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்வாய் அமைக்க, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, நீர்-வளத்துறை அலுவலர்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பணிகளை முடிக்க தேவையான அனைத்து உதவிகளும், கூடுதல் நிதி தேவைப்-படும் பட்சத்தில், தமிழக முதல்வர், நீர்வளத்-துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்-படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சபரி-நாதன், உதவி பொறியாளர் சையத் ஜஹீருதின் மற்றும்

அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us