/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையை கடந்து செல்லும் ஏரி உபரி நீர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

ADDED : ஜன 26, 2025 03:59 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியிலிருந்து சந்துார் வழியாக காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, அதேபோல் தொகரப்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பல்-வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இதில், சந்துார் ஏரியிலிருந்து கடந்த, 3 மாதங்களுக்கு மேலாக உபரிநீர் வெளி-யேறி, சந்துார் பிரிவு சாலை பகுதியில், கடந்து செல்கிறது.
தண்ணீர் கடந்து செல்லும் பகுதி சாலையில், 50 மீட்டர் அள-விற்கு சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இச்சாலை வழியாக போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு சென்று வரும் வாகன ஓட்டிகள், வணிக நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர், மருத்துவமனை மற்றும் பல்வேறு பணிக்கு சென்று வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த, 3 மாதங்களுக்கு மேலாக மழை நீர் தேங்கி குண்டும், குழியுமாக சாலை உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சேரும், சகதியுமாக உள்ள இச்-சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நட-வடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.