நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலி மருத்துவர் கைது
கிருஷ்ணகிரி, நவ. 28-
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்தவர் மாதம்மாள், 48. இவர், முறையாக மருத்துவம் படிக்காமல், ஜெகதேவியில், கிளினிக் அமைத்து அலோபதி சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். இதில், அவர் பிளஸ் 2 மட்டும் முடித்துவிட்டு, அலோபதி சிகிச்சையளித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அளித்த புகார்படி பர்கூர் போலீசார் மாதம்மாளை கைது செய்தனர். கடந்த சிலவாரங்களில் மட்டும் மாவட்டத்தில், 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.