/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலி டாக்டர் கைது: கிளினிக் சீல் வைப்பு
/
போலி டாக்டர் கைது: கிளினிக் சீல் வைப்பு
ADDED : அக் 26, 2024 06:34 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உரிகம் அருகே கோட்டையூர் மலை கிராமத்தில், தர்மபுரி மாவட்டம், பென்னகாரம் அடுத்த பருவதனஹள்ளியை சேர்ந்த அங்கமுத்து, 54, என்பவர் கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், அவர் மருத்துவம் படிக்கவில்லை என்றும், முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் சென்றது. இதனால், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் கிரிஜா, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஆகியோர், நேற்று திடீரென கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.
அப்போது, பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அங்கமுத்து, நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தெரிந்தது. இதனால், முதன்மை மருத்துவர் கிரிஜா கொடுத்த புகார்படி, அஞ்செட்டி போலீசார் போலி டாக்டர் அங்கமுத்துவை கைது செய்தனர். அவரிடம் இருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல், கோட்டையூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் அருணாச்சலா ஆகிய இரு மருந்து கடைகளில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அங்கு உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.