/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அறுந்து விழுந்த மின்கம்பியால் 20 வீடுகளில் பொருட்கள் நாசம்
/
அறுந்து விழுந்த மின்கம்பியால் 20 வீடுகளில் பொருட்கள் நாசம்
அறுந்து விழுந்த மின்கம்பியால் 20 வீடுகளில் பொருட்கள் நாசம்
அறுந்து விழுந்த மின்கம்பியால் 20 வீடுகளில் பொருட்கள் நாசம்
ADDED : ஜூலை 22, 2025 01:44 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, சிப்காட், அரச மரம் பஸ் ஸ்டாப் அருகே, நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்சார கம்பி அறுந்து, வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மின் ஒயர் மீது விழுந்தது.
இதனால் உயர் மின்னழுத்த கம்பியில் சென்ற மின்சாரம், அப்படியே வீடுகளுக்கு செல்லும் மின் ஒயரில் சென்றதால், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வாஷிங் மெசின், டி.வி., பிரிட்ஜ், மின்மோட்டார்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து நாசமாயின. அதே பகுதியிலுள்ள இண்டிகோ ஏ.டி.எம்.,ல் இருந்த மூன்று பேட்டரிகள் எரிந்தன. ஆனால், அதிலிருந்த, 9 லட்சம் ரூபாய் தப்பியது.
போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மதியம் வரை அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினர்.