ADDED : ஜன 06, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே பாப்பிரெட்டிபாளையத்தை சேர்ந்-தவர் முனியப்பா, 68, விவசாயி; கடந்த, 3 மதியம், 2:00 மணிக்கு அப்பகுதியிலுள்ள தன் நிலத்தில் பணி செய்து கொண்டி-ருந்தார்.
அப்போது அவரை பாம்பு கடித்த நிலையில், உறவி-னர்கள் மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

