/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு
/
டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு
டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு
டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு
ADDED : ஏப் 17, 2025 01:28 AM
பாலக்கோடு:பாலக்கோடு அருகே, விவசாய பணியின்போது, டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி, தலை துண்டாகி பலியானார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள, கொள்ளுப்பட்டியை சேர்ந்த விவசாயி விஜய், 32. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து, உழவு பணி மேற்கொண்டு வந்தார். நேற்று காலை, 6:30 மணிக்கு உழவு பணிக்கு செல்ல வேண்டி, டிராக்டரை ஸ்டார்ட் செய்து விட்டு, டிராக்டரின் பின்பக்கம் சாய்ந்து, ரோடோவேட்டர் கொக்கியை மாற்ற முயற்சி செய்தார்.அப்போது, நிலை தடுமாறி ரோடோவேட்டர் மேல் விழுந்ததில், விஜய்யின் தலை துண்டாகி, சம்பவ இடத்தில் பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு போலீசார் விஜய் சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.